செய்திகள்

டெல்லி டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 410 ரன்கள் இலக்கு

டெல்லி கடைசி டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 246 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 410 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. சண்டிமல் 147 ரன்னுடனும், சண்டகன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.


2-வது இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த முரளி விஜய்

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் 111 ரன்களும், சண்டிமல் 164 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.