செய்திகள்

டெல்லி டெஸ்ட்: மேத்யூஸ், சண்டிமல் சதம்; பாலோ-ஆன் தவிர்க்கிறது இலங்கை

டெல்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் மேத்யூஸ் மற்றும் சண்டிமல் சதத்தால் இலங்கை அணி பாலோஆன்-ஐ தவிர்க்கிறது.

மாலை மலர்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


சதம் அடித்த மேத்யூஸ்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ், சண்டிமல் ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இதன் காரணமாக இருவரும் சதம் அடித்தனர். மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மேத்யூஸ் - சண்டிமல் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்துள்ளார்.


சதம் அடித்த சண்டிமல் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி