செய்திகள்

சேஸிங்கில் 9-வது வீரராக களம் இறங்கி அரைசதம் அடித்த 4-வது வீரர் புவனேஸ்வர் குமார்

சேஸிங் செய்யும்போது 9-வது வீரராக களம் இறங்கி அரைசம் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பெற்றுள்ளார்.

மாலை மலர்

8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமார் சிறப்பாக விளையாடினார். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 53 ரன்னும், டோனி 45 ரன்னும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 9-வது விக்கெட்டாக களமிறங்கு அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

இந்த அரைசதம் மூலம் ஒருநாள் போட்டியில் சேசிங்கின் போது வெற்றி பெற்ற ஆட்டத்தில் 9-வது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த 4-வது வீரர் புவனேஸ்வர்குமார் ஆவார்.