ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (ஜூன் 1-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இந்தியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
29-ந்தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்றோர் சிறப்பாக பந்து வீசி திறமையை நிரூபித்தார்கள். இன்று முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா கடந்த 6 மாதங்களாக 50 ஓவர்கள் போட்டிகளில் விளையாடவில்லை. இன்று அவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக இந்த ஆட்டம் இருக்கும். அதேபோல் கேதர் ஜாதவ் தனது திறமையை நிரூக்க உள்ளார்.
ரோகித் சர்மா கட்டாயம் பேட்டிங் செய்வார். ஆனால் யுவராஜ் களம் இறங்கலாம். அல்லது இறங்காமலும் இருக்கலாம் என்றார்.