இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா சாதனைப் படைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் பின்வருமாறு:-
1. 2012-13-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா, சொந்த மண்ணில் தற்போது இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.
2. பேட் கம்மின்ஸ் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
3. நேற்றைய போட்டியில் தவான் - ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்தது. இதன்மூலம் அதிக சதங்கள் கண்ட ஜோடி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி 21 சதங்களும், கில்கிறிஸ்ட் - மேத்யூ ஹெய்டன் ஜோடி 16 சதங்களும் அடித்துள்ளது.
4. 143 ரன்கள் அடித்த ஷிகர் தவான், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 137 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
5. 3-வது விக்கெட்டுக்கு கவாஜா - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி 192 ரன்கள் குவித்தது. இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
6. தவான் - ரோகித் சர்மா ஜோடி 193 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
7. 359 ரன்களை சேஸிங் செய்தது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சேஸிங் ஆகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது மிகப்பெரிய சேஸிங் ஆகும்.