இதில் இந்திய வீரர் பிரணாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-15 என பிரணாய் வீழ்த்தினார். ஆனால், 2-வது செட்டை 9-21 என கோட்டை விட்டார். என்றாலும் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றை 21-14 எனக்கைப்பற்றி லின் டானை முதல் சுற்றோடு வெளியேற்றினார்.