செய்திகள்

நேபாளத்தில் நகராட்சி தேர்தல்: இந்தோ- நேபாள் எல்லை மூடல்- வாகன ஓட்டிகள் அவதி

நேபாளத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு காரணமாக இந்தோ- நேபாள் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த எல்லை வழியாக சமூக விரோதிகள் நேபாளத்திற்குள் ஊடுருவி தேர்தலின்போது வன்முறைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இருநாட்டு எல்லைகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதற்காக உயர்நிலை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளூர் அதிகாரிகள், போலீஸ், சஷாஸ்ட்ரா சீமா பால் எல்லை பாதுகாப்புப்படை, ராணுவம், சுங்கத்துறை, குடியமர்வு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எல்லையை மூடுவதற்காக முடிவை எடுத்தனர்.

SCROLL FOR NEXT