மும்பை:
மும்பை நகரில் இன்று நடைபெற்ற இந்தியா - இஸ்ரேல் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்திய மக்கள் மற்றும் கலாசாரத்தின்மீது தனது மனதின் அடிஆழத்தில் மிகுந்த மரியாதை உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் உலகின் இரு பழமையான கலாசார தொடர்புகள் உண்டு. நாம் ஜனநாயகவாதிகள், அன்பையும், சுதந்திரத்தையும், மனிதநேயத்தையும் பகிர்ந்து கொள்பவர்கள். நாங்கள் உண்மையாகவே உங்களின் கூட்டாளிகள். இந்த பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகும்.
பழமைவாய்ந்த இந்தியா-இஸ்ரேல் இடையிலான துவக்கம் அற்புதமானது. எல்லையில்லா சாத்தியக்கூறுகள் இதில் அடங்கியுள்ளன.
இந்தியாவும் இஸ்ரேலும் நட்புறவின் மூலம் அபாரமான உயரத்தை அடைந்துள்ளன. இது ஒரு துவக்கம்தான். இந்தியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் திறமைகளை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியாக இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான நேரடி விமானச் சேவை அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். #IsraelPM #matchmadeinheaven #tamilnews