நியூயார்க்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ் வெங்கட போத்துரு(44) அமெரிக்காவில் விர்கா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் ஹைச்1-பி விசா திட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் இருந்து 4.5 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் வாங்கியுள்ளார். மேலும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் வாங்கி தருவதாகவும் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளார்.
இம்மோசடி குறித்து ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்து குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் அவர் மீதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 1 ஆண்டு 1 நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரமேஷ் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தும் படி செய்து 4.5 லட்சம் டாலர் மோசடி செய்துள்ளார். பின்னர் குடியுரிமை வாங்கிவதற்கு பணம் மோசடி செய்தது தெரியாத விதம் தவறான விண்ணப்பங்களை வழங்கியுள்ளார். இருப்பினும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரமேஷ்க்கு 1 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. #tamilnews