இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் பிரதமராகும் வாய்ப்பினை வரத்கர் பெற்றார். 38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் அதீத ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அயர்லாந்தின் முதல் ஓரினச் சேர்க்கை பிரதமரும் இவரே ஆவார்.
பைஃன் கேயல் கட்சியைச் சேர்ந்த வரத்கர் வெற்றி பெற்றதாக பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். விரைவில் அயர்லாந்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். கத்தோலிக்க மக்கள் அதிகளவில் வாழும் நாடுகளுள் ஒன்றான அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ள வரத்கர், குடியரசு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
பாராளுமன்ற தலைவருக்கான ஓட்டெடுப்பில் 57 பேரில் 50 பேரின் ஆதரவும், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவும் கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று வரத்கர், நாட்டின் 11-வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் 47 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்க்கது.