ஹிரோஷிமா:
பெண்களுக்கான பைனல்ஸ் தொடர் ஹாக்கி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிலியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து 2-வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அடுத்தடுத்து கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரையிறுதியில் ரஷ்யா-ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும். இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.