ஜப்பானில் காகமிகஹாராவில் பெண்கள் ஆசியக்கோப்பை ஹாக்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மலேசிய அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் மூன்று காலிறுதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. மிகவும் நிதானமாக விளையாடிய இந்திய அணி நான்காவது காலிறுதியில் இரண்டு கோல்கள் அடித்தன.
வந்தனா கட்டாரியா மற்றும் குர்ஜித் கர் அடுத்தடுத்து கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். மலேசியா அணி இறுதி வரை எந்த கோலும் அடிக்கவில்லை. இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 9 புள்ளிகளுடன் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.