செய்திகள்

ஆசிய கோப்பை சாம்பியன்: நாடு திரும்பிய இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று நாடு திரும்பிய இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலை மலர்

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று நாடு திரும்பிய இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டில் ஆசிய கோப்பைக்கான ஆக்கி தொடர் நடைபெற்றது. லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடிய இந்திய மகளிர் ஆக்கி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் ஷுட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜப்பானில் இருந்து இந்திய மகளிர் ஆக்கி அணி நாடு திரும்பியது. டெல்லி  விமான நிலையத்தில் வந்து இறங்கிய இந்திய அணியின் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.