அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் (பின்பி பரிபாஸ் ஓபன்) நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் ஜப்பான் வீரர் டாரோ டேனியலை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் ஜோகோவிச் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் கடும் போராட்டத்திற்குப்பின் 6(3)-7 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 1-6 என சரணடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். #IndianWells #BNPParibasOpen