இந்தியா- சீனா எல்லை 
செய்திகள்

எல்லையில் இந்திய ராணுவம் சட்டவிரோத அத்துமீறல்: சீன தூதரகம் குற்றச்சாட்டு

இந்தியா - சீனா எல்லையில் இந்திய ராணுவம் சட்டவிரோத அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக இந்தியாவுக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

இந்தியா மற்றும் சீனா படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

கடந்த மாதம் 29-ந்தேதி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவம்தான் சட்டவிரோத அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியாவுக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பாங்காங் சோ பகுதியில் மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் சட்டவிரோத அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சீனா இந்தியாவுக்கு தனித்துவமான பிரதிநிதித்துவங்களை அளித்தது. முன்னணி துருப்புக்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் வலியுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.