செய்திகள்

ரெயில் டிக்கெட்டுகளில் விரைவில் கன்னட மொழி - தென்மேற்கு ரெயில்வே தகவல்

கர்நாடக மாநிலத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் கன்னட மொழியை சேர்க்கும் முடிவு பரிசீலனையில் உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SouthWesternRailway

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இந்தி மொழி இடம்பெற்றிருந்ததற்கு அங்குள்ள பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன். பெயர்பலகைகளை அழித்தனர். இதனை அடுத்து இந்தி மொழி அகற்றப்பட்டது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கில மொழியுடன் கன்னட மொழியை சேர்ப்பதற்காக முடிவு பரிசீலனையில் உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த முடிவை கன்னட மொழி அமைப்புகள் வரவேற்றுள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், மக்களின் சிரமம் போக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். #SouthWesternRailway #TamilNews

SCROLL FOR NEXT