செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த கவுரவம் - குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #IndianPresident #RamNathKovind

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #IndianPresident #RamNathKovind

SCROLL FOR NEXT