செய்திகள்

நேபாளம்: போதை பொருள் கடத்திய இந்திய வாலிபர் கைது

நேபாள தலைநகர் காத்மண்டுவில் போதை பொருள் கடத்திய இந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காத்மண்டு:

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பப்பு ஷா (25) என்ற இந்தியரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

இதேபோல், திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தோஹா செல்லும் விமானத்தில் பயணம் செய்த நார்வே பயணி வைத்திருந்த தோல் பையில் இருந்து 2 கிலோ ஹஷிஷ் என்ற போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT