இந்நிலையில் இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது. வலுவான நெதர்லாந்து அணிக்கெதிராக புதுமுகங்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் இரு அணி வீரர்களும் 2-வது கால்பாதி, 3-வது கால்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.
மந்தீப் சிங்
4-வது மற்றும் கடைசி கால்பகுதியில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் மந்தீப் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது.