செய்திகள்

லண்டனில் உள்ள தூதரகம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணிக்கு அங்குள்ள நமது தூதரகம் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

மாலை மலர்

இங்கிலாந்து நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகளில் 3 அணிகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்திய அணி வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இவ்விருந்தில் தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.