செய்திகள்

சர்வதேச வாள்வீச்சு - தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வெள்ளிப் பதக்கம்

ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அவர் கால்இறுதியில் வெனிசுலா வீராங்கனை பாரேட் டாரசை 15-9 என்ற கணக்கிலும், அரைஇறுதியில் இத்தாலியை சேர்ந்த கியூலாவை 15-10 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ்சிஸ் பிரவுனிடம் 10-15 என்ற கணக்கில் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.