செய்திகள்

அரபு நாடுகளில் 700-க்கும் மேற்பட்ட போலி வேலைவாய்ப்புகளை நீக்கியதாக இந்திய தூதரகம் தகவல்

அரபு நாடுகளில் போலியாக பணியில் அமர்த்தும் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போலி வேலைவாய்ப்புகளை நீக்கியதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது

அரபு நாடுகளில் கட்டடத் தொழில் உட்பட பல்வேறு வகையான தொழில்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 700-க்கும் மேற்பட்ட போலி வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட அந்த பணிகளை அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் முடக்கி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன் வரை இந்திய தூதரகம் நடத்திய ஆய்வில் 792 போலி வேலைவாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 66 வேலைகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத 700-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு தடை விதித்துள்ளதாக அரபுநாடுகளுக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி அறிவித்துள்ளார்.