செய்திகள்

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பாக். ராணுவம் தகவல்

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராக்சிக்ரி செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான உளவு விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து உடனடி பதில்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

கடந்த வருடம் நவம்பர் மாதமும் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.