உள்நாட்டு சண்டை மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவித்த காங்கோ நாட்டில், நிலைத்தன்மையை மீட்டெடுத்து அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐநா அமைதிப்படை பணியாற்றி வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காங்கோவில் உள்ள ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கியை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை மாலை அவர் கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது காணவில்லை என்றும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.