செய்திகள்

டெல்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை

டெல்லி கண்டோன்மென்ட் எல்லைக்குட்பட்ட சாலையில் இன்று ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ArmyMajorwifekilled

புதுடெல்லி:

டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் இன்று கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிரேதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

இந்த மர்ம கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பதும், இன்று காலை சுமார் 10 மணியளவில் இங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிசியோதெராபி சிகிச்சைக்காக சென்ற அரை மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #ArmyMajorwifekilled

SCROLL FOR NEXT