செய்திகள்

அமெரிக்க வாழ் இந்திய மருத்துவ மாணவி சாலை விபத்தில் பலி

அமெரிக்காவில் பல்மருத்துவம் பயின்று வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தரஞ்சித் பார்மர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நியூயார்க்:

அமெரிக்காவில் பல்மருத்துவம் பயின்று வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தரஞ்சித் பார்மர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள ஹெம்ஸ்டெட் டர்ன்பிக் பகுதியை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ரஞ்சித் பார்மர். இவரது மகள் தரஞ்சித் பார்மர். அங்குள்ள கல்லூரி ஒன்றில் பல்மருத்துவம் பயின்று வரும், தரஞ்சித் தனது காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவரது கார் மீது மோதியது. இதனால் லேசான சேதம் ஏற்பட்டது. எனவே அவர் கீழே இறங்கி லாரி டிரைவருடன் பேசி விட்டு தனது காரை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்படுத்திய லாரியுடன் புறப்பட்டார்.

அந்த நேரம் எதிர்பாராத விதமாக வேகமாக பாய்ந்த லாரி மாணவி தரஞ்சித் பார்மர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

SCROLL FOR NEXT