செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - பாய்மர படகுப்போட்டியில் 3 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற பாய்மர படகுப்போட்டிகளில் ஒரு வெள்ளி உள்பட 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. #AsianGames2018

ஜகர்த்தா :

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பாய்மர படகுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பாய்மர படகுப்போட்டியில் ஆண்களுக்கான 49er பிரிவின் மற்றொறு போட்டியில் வருண் தாக்கர் அஷோக் மற்றும் செங்கப்பா கணபதி கேலபண்டா ஜோடி மூண்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான ஒற்றையர் பாய்மர படகுப்போட்டியின் ஓப்பன் லேசர் 4.7 பிரிவில் ஹர்ஷிதா தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம், 13 தங்கம், 22 வெள்ளிப் பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018