அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. என்றாலும் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதிப் பெற்றது. இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான தொடரில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.