செய்திகள்

முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும்: அதுதான் முதல் இலக்கு- சஹா சொல்கிறார்

ஒரு டெஸ்ட் தொடரின்போது முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதுதான் முதல் இலக்கு என டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் முதல் இலக்கு என சஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், முதல் இலக்கு முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இது தொடரை வெல்வதற்கு உத்வேகமாக இருக்கும்.

ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட சவால்கள் உள்ளன. நாம் தயார் செய்தது போன்று அங்கு இருக்காது. ஒவ்வொரு போட்டிக்கும் நாம் சென்று கொண்டிக்க வேண்டியதுதான். இலங்கைக்கு எதிரான தொடரில் நாம் சிறப்பாக செயல்பட்டால், பின்னர் தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து சிந்திப்போம்.