நவ்தீப் சைனி, குளூஸ்னர் 
செய்திகள்

150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்

150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அவருடைய  சிறப்பான பந்து வீச்சு இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை வெகுவாக கவர்ந்தது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் சிறப்பாக பந்து வீசினார். 150  கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனி தென்ஆப்பிரிக்கா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் குளூஸ்னர் நவ்தீப் சைனியின் பந்து வீச்சை பாராட்டியுள்ளார்.

நவ்தீப் சைனி குறித்து குளூஸ்னர் கூறுகையில் ‘‘நவ்தீப் சைனிக்கு அங்கீகாரம் கிடைத்ததை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்களை இந்தியாவில் அதிக அளவில் பார்க்க முடியாது.