ஆனால் லார்ட்ஸில் 23, 17 என நாற்பது ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரகானே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் திணறி வருகிறார்கள்.
இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோலியை நம்பியே இருக்கிறது. அவர் ஒன் மேன் ஆர்மியாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பேட்டிங்கில் ஜாம்பவான விளங்கியவரும் ஆன சங்ககரா, இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக விராட் கோலியை பேட்டிங் செய்து வருவதை பார்க்கையில் அவருடன் மற்ற பேட்ஸ்மேன்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த பெர்மார்மர். ஆனால், மற்ற வீரர்கள் சிறந்தவர்களே.