இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.