ரிஷப் பந்த் 
செய்திகள்

ஆடும் லெவனில் ரிஷப் பந்துக்கு தொடர்ந்து இடம்: பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் சொல்கிறார்

இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கிய ரிஷப் பந்த் இந்திய ஆடும் லெவன் அணியில் நீடிப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இடது கை பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த், தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘ஷிகர் தவான் காயத்தால் வெளியேறிய பின், அணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் இல்லையே என்று எண்ணியது. வலது - இடது கம்பினேசனால் பந்து வீச்சாளர்களை அப்செட் ஆக்குவதற்கான தந்திரம்தான் அது. அடில் ரஷித் அதிகமான ஓவர்கள் வீசவில்லை.

ரிஷப் பந்த் ஓரளவிற்கு சிறப்பாகவே பேட்டிங் செய்தார். சிறந்த வகையிலான ஒன்றிரண்டு ஷாட்ஸ் ஆடினார். ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஆகவே, நாங்கள் அடுத்த போட்டியிலும் ரிஷப் பந்துக்கு ஆதரவாக இருப்போம்.

அவர்கள் எங்களுடன் அணியுடன் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் ஒருவர். அவர் தற்போதுதான் அணியில் சேர்ந்தவர் இல்லை. எங்களுடன் இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் செலவழித்து வருகிறார். சர்வதேச லெவல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அசத்தி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு சற்று புதிது.