இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டபோது, அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச்-க்கு கெண்டைக்காலில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் வீரியம் அடைந்ததால் தொடர் முழுவதும் பிஞ்ச் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
பரிசோதனை அடிப்படையில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு எடுத்தால் மீதமுள்ள போட்டிகளில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பிஞ்ச்-க்குப் பதிலாக மாற்று வீரராக ஹேண்ட்ஸ்ஹாம்பை ஆஸ்திரேலியா அணி அழைத்துள்ளது.