செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் 225 இந்தியர்கள் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டி இந்தியா சார்பில் 225 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். #CommonwealthGames

மாலை மலர்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற ஏப்ரல் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் 225 வீரர்கள்- வீராங்கனைகள் பங்கு பெறுகிறார்கள்.

இந்தப்போட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கூடைபந்து அணிகள் விளையாடுகிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 215 வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்றனர்.