காத்மண்டு:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 9 ஆயிரம் மக்கள் இந்த பூகம்பத்தால் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான பேர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில், ஐ.நா சபையின் கீழ் இயங்கும் வளர்ச்சி திட்ட முகமை மற்றும் சேவை திட்ட முகமை அந்நாட்டில் மறுகட்டமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
கோர்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் சுமார் 16.2 அமெரிக்க மில்லியன் டாலர் மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சுமார் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்ட உள்ளது. மூன்று ஆண்டுகளில் இந்த திட்டம் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Nepal