தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வீரரான ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் கோச்சர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவரை தேர்வுக்குழு ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜூலியன் பவுன்டைன், அபேய் சர்மா ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
மேலும், பேட்டிங் பயிற்சியாளருக்கான நேர்காணலில் விக்ரம் ரத்தோர், பிரவின் அம்ரே ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தற்போதுள்ள சஞ்சய் பாங்கருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.