அதன்படி 24 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 6-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இந்தியாவின் 6 மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ‘‘2019-ம் ஆண்டின் 20 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையுடன், இதையும் சேர்த்து நடத்தினால் இந்தியாவில் கால்பந்து வளர முக்கிய காரணியாக அமையும்.
இந்த வருடத்திற்கான 20 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தென்கொரியாவில் நடைபெற்றது. இந்தியாவில் 2019-ம் ஆண்டு நடத்துவது பற்றி பிபாவுடன் ஆலோசனை நடத்த நாங்கள் விருப்பமாக உள்ளோம்’’ என்று இந்திய கால்பந்து பெடரேசன் தலைவர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.