கால்பந்து அணிகளுக்கான பிஃபாவின் உலகத் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா நான்கு இடங்கள் முன்னேறி 96-வது இடத்தை பிடித்துள்ளது. பிஃபா தரவரிசையில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய உயர் தரவரிசை இதுவாகும்.
நேபாளத்திற்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் இநதியா 2-0 என வெற்றி பெற்றிருந்தது. இதன்மூலம் இந்த ஏற்றம் கண்டுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன். இவரின் சிறப்பான பயிற்சி மூலம் இந்திய கால்பந்து அணி நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. இவர் பயிற்சியாளராக வரும்போது இந்தியா 171-வது இடத்தில் இருந்தது. தற்போது 96-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.