செய்திகள்

மோட்டார்சைக்கிள் விற்பனை: சீனாவை முந்தி முதலிடம் பிடித்த இந்தியா

சர்வதேச மோட்டார்சைக்கிள் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2016-17 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 1.75 கோடி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாலை மலர்

புதுடெல்லி:

சர்வதேச மோட்டார்சைக்கிள் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி 2016-17 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.75 கோடி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்ததோடு, சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பதே இந்தியா முன்னிலை பெற காரணமாக கூறப்படுகிறது.

மோட்டார்சைக்கிள் சந்தையில் சீனாவை விட சுமார் 9 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் வித்தியாசத்தில் முந்தியுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் 100சிசி  முதல் 125சிசி ஆதிக்கம் செலுத்துகின்றன. மற்ற ரக மாடல்களில் ராயல் என்ஃபீல்டு நிறவனம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. 

இந்தியாவில் முறையான பொது போக்குவரத்து முறையில்லாததால், ஆடம்பரத்தை கடந்து இருசக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. இத்துடன் பெரும்பாலானோர் விரும்பும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் 125சிசி மாடல்களில் கிடைக்கிறது.

அதிகப்படியான நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படுவதும் இந்திய மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்துடன் உள்ளூர் மள்றும் வெளியூர் நிறுவனங்கள் இணைந்து மோட்டார்சைக்கிள் விற்பனை மற்று்ம தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.  

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இணைந்து நடுத்தர ரக பைக்களை தயாரித்து இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தன. முன்னதாக டியூக் மற்றும் ஆர்.சி. நிறுவனங்களுடன் இணைந்து பஜாஜ் நிறுவனம் வெற்றிகரமான வியாபாரம் செய்துள்ள நிலையி்ல், புதிய கூட்டணி சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.