பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார்.
பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே தற்போதைய அதிபர் டிரம்ப் இருந்து வந்தார்.
இதனையடுத்து, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்ததை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, முடிவை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ”பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற டிரம்பின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் அமெரிக்கா தனது முடிவினை மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா பேராசைக்காக கையெழுத்திடவில்லை. அதேபோல் அச்சத்திலும் இல்லை. சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கையெழுத்திட்டது.