வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் 
செய்திகள்

2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி திருமணம் - பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

சீக்கிய பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாகிஸ்தானில் உள்ள ஜக்ஜித் கவுர் என்ற சீக்கிய பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததாகவும், இதுகுறித்து பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தார் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். பாகிஸ்தான் அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு கமிட்டி அமைத்துள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “பாகிஸ்தானில் 2 சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததற்கு இந்திய மக்களும், அந்த சமுதாயத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாங்களும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளோம். அதோடு இந்த சம்பவத்திற்கு உடனடியாக பரிகாரம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம்” என்றார்.