செய்திகள்

கிங்ஸ் கோப்பை கால்பந்து: 3-வது இடத்தை பிடித்தது இந்தியா

தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி உள்ளூர் அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பிடித்தது.

புரிராம்:

தாய்லாந்தில் உள்ள புரிராம் நகரில் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில் 4 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் முதல் சுற்றில் இந்திய அணி, கியூராகாவ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல் உள்ளூர் அணியான தாய்லாந்து அணி, வியட்நாம் அணியிடம் தோற்றது. 

இதையடுத்து தோல்வி அடைந்த இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா தரப்பில் அனிருத் தாபா, 17-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கடந்த 6 மாதங்களில் தாய்லாந்து அணியை இரண்டாவது முறையாக இந்திய அணி வீழ்த்தி உள்ளது. இந்திய அணி அடுத்து அகமதாபாத்தில் ஜூலை மாதம் நடைபெற்ற ஹீரோ சர்வதேச கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதில், சிரியா, வடகொரியா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.