கொல்கத்தா:
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆடுகளம் மூடப்பட்டு, புல் தரையில் இருந்த தண்ணீர் எந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டது. ஈரப்பதம் குறைந்த நிலையில், ஒரு மணியளவில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதனால் சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப் பிறகு 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ள வீரர்கள் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரகானே, அஸ்வின், சகா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷமி.
இலங்கை: கருணாரத்னே, சதீரா சமரவிக்ரம, லகிரு திரிமன்னே, மேத்யூஸ், சண்டிமல் (கேப்டன்), டிக்வெல்லா, தாசன் ஷனகா, தில்ருவான் பெரேரா, ரங்கானா ஹெராத், லக்மல், லகிரு காமேஜ்.