செய்திகள்

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா ‘ஏ’ அணி

இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மாலை மலர்

விசாகப்பட்டினம் :

இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 4-வது அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அபிமன்யூ ஈஸ்வரன் 83 ரன்களும், விஜய் சங்கர் 61 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 45.1 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் ஒர்க்கர் சதம் (108 ரன்) அடித்தும் பலன் இல்லை. 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய ‘ஏ’ அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 3-வது ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி ஏற்கனவே வெற்றி கண்டிருந்தது. கடைசி போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.