தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 180 ரன்களும், கப்பின்ஸ் 73 ரன்களும், தாவித் மலன் 74 ரன்களும் குவித்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங்கை தொடங்கியது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கருண் நாயர் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து பிரித்வி ஷா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த பிரித்வி ஷா 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 26 ரன்களுடனும், ரிஷப் பந்த் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.