கல்கி பகவான் 
செய்திகள்

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை- 40 இடங்களில் அதிரடி வேட்டை

ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி ஆசிரம உரிமையாளரின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் சபி அகமது சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT