தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி 
செய்திகள்

கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை

கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர்:

கடலூர் ஆர்.எஸ்.எஸ். சமர்ப்பணம் சேவை மையம் சார்பில் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீரும், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆரிய வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர் வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு தலைமை தாங்கினார். திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடலூர் யோகிராம் பார்மா உரிமையாளர் ரவிச்சந்திரன், பாபு ஏஜென்சி உரிமையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையின் பயன்கள் குறித்து டாக்டர் கணபதி விளக்கி கூறினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் அரிசி, முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட மக்கள் தொடர்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT