பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், அந்த அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் இமாம் உல் ஹக் ஆவார். இமாம், தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில பெண்களுடன் இமாம், நடத்திய வாட்ஸ் அப் சாட்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள சாட்டில், இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால், என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் இமாம் பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான் கூறுகையில், 'இந்த விவகாரம் இமாமின் தனிப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இமாமிடம் பேசினேன். அவர் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். வீரர்கள் ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.