சென்னை:
சசிகலா உறவினர்கள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டோரிடம் வருமான வரி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதன்படி மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் இன்று வருமான வரி அலுவலகத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. ஷகிலாவின் கணவரும், இளவரசியின் மருமகனுமான ராஜராஜன் மட்டும் இன்று ஆஜார் ஆனார்.